எம்.எல்.பிரபா/ஒரே கல்லில் இரண்டு மாங்காய்


விஜயா குழந்தையுடன் பக்கத்து வீட்டிற்கு வந்தாள். ராதா.. “இந்தா குழந்தையை பத்திரமா பாத்துக்கோ. 10 மணிக்கு நம்ம தெருவுல கடைசியில் இருக்கிற பேபி ஸ்கூலில் கொண்டு போய்விட்டுடு அவங்க பார்த்துப்பாங்க. மறுபடியும் 12 மணிக்கு போய் குழந்தையை கூட்டிட்டு வந்து அவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வை. பால் ,பிஸ்கட், துணி குழந்தைக்கு தேவையானது எல்லாத்தையும் இந்த பையில வச்சிருக்கேன்”

சரிக்கா, “நான் தனியா தான் இருக்கேன். குழந்தையா நல்லா பாத்துக்குறேன்” என்றாள் ராதா.

ராதா, “உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே? உனக்கு இப்ப தான் கல்யாணம் ஆயிருக்கு .உனக்கும் ஒரு குழந்தை பிறக்கும் இல்ல,அது வரைக்கும் என் குழந்தையை பார்த்துக்கோ உனக்கு இதுவே ஒரு அனுபவம் ஆகிடும். உன் குழந்தையும் நீ நல்லா பாத்துக்க முடியும்.”

சிரித்தாள் ராதா.
“சரி, சரி எனக்கு லேட் ஆயிடுச்சு, நான் ஆபீஸ் முடிஞ்சு 6:00 மணிக்கு வந்து குழந்தையை கூட்டிட்டு போறேன். பை.. பை” என்றாள் விஜயா.

வாசலில் காத்துக் கொண்டிருந்த கணவனின் பைக்கில் ஏறினாள் விஜயா. “அப்பா! இப்பதான் எனக்கு நிம்மதி! குழந்தையை பாத்துக் குறதுக்கு, ஆள் போட்டா சம்பளம் கொடுக்கணுமே? ராதா, குழந்தைய நல்லா பாத்துப்பா. சம்பளமும் எனக்கு மிச்சம். எப்படி என் சாமர்த்தியம்?” என்று கணவனிடம் கூறினாள் விஜயா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன