
(1)
வேண்டும்; என்று வேண்ட ஒன்றுமில்லை!
வேண்டாது இருக்க முடியவும் இல்லை?
வேண்டுவது நீயே அறிந்து, பரிந்தருள்வாய்!
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்
🪷
(2)
சஞ்சல புத்தி அகன்றிட நான்
தஞ்சமென உன்னை நாடி அடைந்தேன்!
வஞ்சனை கொஞ்சமும் இன்றி எந்தனுக்கு,
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்
🪷
(3)
மிடி ஒன்றுமில்லாமல்
செந்தாமரை விட்டு,
என் மனத்தாமரை நீ குடிபுகுவாய்;
படிப்படியாக என் பழவினை அறுக்க,
வரலக்ஷ்மி வரம் தருவாய்.
🪷
(4)
செய்யும் செய்கைக்கு
உருவம் தா!
புரியும் வினைக்கு வெற்றி தா!
செய்யும் நோக்கத்திற்கு புகழ் தந்தே
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்
🪷
(5)
வருவதும் போவதும் உன் சித்தம்!
உன் விருப்பம் போலதே நடக்கட்டும்!
செல்வத் திருமகளுன் சித்தத்தில் நானுறைய
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்
