
“ ஏன்டி இந்த புள்ளைய நீ பெத்த புள்ள மாதிரி தூக்கி கொஞ்சற ஆனா அந்த நடிகை இத தம் புள்ளைங்குது?”
“ஆமா அவங்க புள்ளதான்”
“ ஆனா நீ பெத்த புள்ளன்னியே? தத்து கொடுத்திட்டியா?”
“ சே சே.. தத்தெல்லாம் கொடுக்கல”
“ அப்ப நீ பெக்கலையா?”
“அய்யோ அக்கா..பெத்தது நான்தான் ஆனா இது அவங்க புள்ளதான்”
“ என்னடி கொளப்பற”
“ பணக்காரங்க கொளந்தைய வளக்கறது கஸ்டம்ன்டு ஆயா போடற காலம் போயிடுச்சு. இப்ப அவங்க கொளந்தைய வவுத்தில சுமக்ககூட கஸ்டம்டு அதுக்கும் ஆள் போட ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு வாடகைத் தாய்னு பேரு”
“என்ன கஸ்மாலம்டி நம்பும்படியா இல்ல போ. நெசத்த சொல்லு நடிகையோட வூட்டுக்காரன் உங்கிட்ட..”
“ சீ சீ அதெல்லாம் ஒன்னுமில்ல அவங்க கருவ எடுத்து என்னோட வயுத்தில வச்சாங்க. ஒனக்கு இதெல்லாம் புரியாது”
“ எனக்கு இந்த கருமாந்திரமெல்லாம் புரிய வேண்டாம். ஆகமொத்தம் ஒலகம் குட்டிச்சொவரா போச்சுன்னு மட்டும் புரிஞ்சிடுச்சு”

உண்மையான கதை. கடைசி லைன்மாஸ்டர்பீஸ்