
நிதர்சனம்
கையில் குழந்தையுடன் வந்து நின்ற மேகலையைக் கண்டு திடுக்கிட்டாள் அஞ்சலை.
“இன்னாடி, இத்தினி காலைல ஒத்தையாளா புள்ளையத் தூக்கிக்கினு வந்தவ”
“இன்னாத்தச் சொல்ல, நீ எனக்குக் கட்டிவச்ச ராச தொரைக்கு கூட்டரு வேணுமா. அதுக்கு துட்டு வாங்கிணு வரச்சொல்லி அனுப்பிக்கிறான்”
“என்னது கூட்டரா? நானே அல்லாடிக்கினுக்கிறேன். ஒங்கப்பன் செத்தநாளுக்குப் படைக்க துட்டு இல்ல இங்ஙன. நல்லாக்கிதுடி நாயம்”
இரவு குழந்தைக்கு இட்டிலியைக் குடுத்து தாயும் மகளும் உறங்கினார்கள்.
“காலைல வெள்ளென வேலைக்குப் போயிருவேண்டி. மருதண்ணே கடையில டீயும் பண்ணும் வாங்கித் துண்ணுட்டுக் கெளம்பிப் போயிரு. என்னிய உலுப்பினாலும் ஒத்தக்காசு தேறாது” அஞ்சலை சொல்லிவிட்டாள்.
ஆறுமணிக்கு எழுந்த மேகலை மருதண்ணேக் கடையிலிருந்து கணவனுக்கு போன் போட்டாள்.
“இங்ஙன துட்டு ஒன்னும் பேராது. நானும் ஒயச்சு துட்டு சேத்துட்டு வாறேன். ஆயி அப்பன கவனிச்சுக்க. கஞ்சிக்கே வயி இல்லே. கூட்டரு கேட்குது ஒனக்கு” போனை வைத்து விட்டாள்.
பத்து மணிக்கு எல்லோரும் ஏதோ கூடி கூடிப் பேசும் போதுதான் தெரிந்தது அஞ்சலைக்கு. மகள் மேகலை மரத்தில் பேரனை ஏனை கட்டிப் போட்டுவிட்டு வேலைக்குச் சேர்ந்திருப்பது.
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்

சரியான நெத்தியடி