பத்மா ராகவன்/நடிகை நடிக்கிறாள்

“ஏ சாந்தி. ரெடியா. குழந்தைக்கு வேண்டிய சாப்பாடு, துணிமணி எடுத்து வச்சிக்கோ. ரெண்டு நாள் ஏற்காடுல ஷுட்டிங். எனக்கு ரொம்ப டைட் ஷெட்யூல். கூடவே வந்தாலும் குழந்தை கிட்டகூட வரமுடியாது. பத்திரமா பாத்துக்கோ. டிரைவர் வண்டிய எடுங்க. கெளம்பலாம்.” பரபரத்தாள் நடிகை லதா.

இது வழக்கமான விஷயம்தான். அவள் வெளியூர் ஷூட்டிங் போகும்போது, அவளது மூணு வயதுக் குழந்தையுடன், துணை தேவதை சாந்தி உடன் சென்று பாத்துப்பா.

ஷூட்டிங் ஸ்பாட். தூரத்தில் மேக்கப் முடிந்து வந்த லதாவைப் பார்த்த சாந்தி, விக்கித்து நின்றாள். ஆச்சரியத்துடன் நடப்பதைக் கவனித்தாள்.

“லைட்ஸ ஆன். க்ளாப்” என்றதும், துணைதேவதை வேஷமணிந்த லதாவிடம் ஒரு மூணுவயதுக் குழந்தை கொடுக்கப்பட்டது. ஒரு எக்ஸ்ட்ரா நடிகை வந்து, “வேணி. கொழந்தய பத்தரமா பாத்துக்கோ. வேளா வேளைக்கு அதுக்கு சாப்பாடு கொடு. நான் லேடீஸ் க்ளப் ஃபங்க்ஷனுக்குப் போறேன். சிசிடிவி மூலமா உன்னைக் கவனிப்பேன். நான் வர லேட்டாகும்.ஜாக்கிரதை ” என மிரட்டிவிட்டுப் போகிறாள். லதா அழும் குழந்தையுடன் அல்லாடுகிறாள். இக்காட்சி பலமுறை திரும்பத் திரும்பப் படமாக்கப்பட்டது.

“குழந்தையை என்னிடம் கொடுத்துட்டு, யாரோ குழந்தையுடன் நாள்பூரா பணத்துக்காக மன்னாடுறாங்களே” மோவாயில் இடித்துக்கொண்டாள் சாந்தி.

122 வார்த்தைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன