
வெள்ளிக்கிழமையன்று திரு.அழகியசிங்கர் அவர்களின் கூட்டத்தில் பதிவு செய்த கவிதைகள்
- இரவின் அழகு
சூரியன் மெல்ல மறைய,சுகமாய் தென்றல்
உடலை வருட, சுமைகள் மனதில் குறையும்
நல்ல பாடல் ஒன்று மனதிற்கு இன்பம் தரும்
பூக்கள் வாசம் வீச, வண்ண மலர்கள் அழகாய் பூக்க
நட்சத்திர தேவதைகள் உலா வர,
நிலவு என்னும் இளவரசி வானில் தோன்றுவாள்
மேகம் அழகாய் நகர, மழை
துளிகள் பூமியில் அமுதமாய் பொழிய
பன்னீர் துளியாய் மரங்கள் நனைந்தன
இரவில் கடல் அலைகள் விண்ணை தொட முயல்கின்றன
வானுக்கும் பூமிக்கும் தூது கடல் அலைகளே
கடற்கரை எங்கும் அழகிய நிலவின் பௌர்ணமி ஒளி
மனதில் நம்பிக்கையின் ஒளி
நாளை விடியும் என்ற எண்ணத்தின் எதிரொலி
கவிஞர் லலிதா ஷ்யாம்
மதுரை-625016.
கைப்பேசி : 9843260454 .- கதிரவனின் ஒளி
காலையில் பூபாளம் கதிரவனின் உதயம்
இதயத்தில் இன்பம்,உதயமாகும் நல்ல எண்ணங்கள்
பறவைகள் வானில் பறக்க பரவசமாய் உள்ளம் குளிர
உள்ளம் எங்கும் உற்சாகம், காலையில் காபி
கண்டவுடன் புத்துணர்ச்சி, இமயம் தொட்ட மகிழ்ச்சி,
காலையில் நடை பயிற்சி,இலக்கை அடையும் முயற்சி,
இனிய பாடலுடன் இனிய காலைப்பொழுது
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளி செல்ல
மற்றவர்கள் கனவுடன் அலுவலகம் செல்ல
நல்ல பொழுதாய் விடிந்தது
மனம் குளிர்ந்தது, மகிழ்ச்சி,மலர்ச்சி பொங்கியது
இன்பம் எங்கும் தங்கியது மங்களம் எங்கும் தங்கட்டும்
மங்களம் பூமியில் நிறையட்டும்
எங்கும் கனவுகள் நனவாகட்டும்
உலகம் உயிர்ப்புடன் இருக்கட்டும்
உயிர்கள் நலமுடன் வாழட்டும்
கவிஞர் லலிதா ஷ்யாம்
மதுரை-625016.
கைப்பேசி : 9843260454
- கதிரவனின் ஒளி
- அடிமை இலா வாழ்வு
அகிம்சை உண்டு அடிமை இல்லை
இரக்கம் உண்டு இரத்தம் இல்லை
கனவுகள் உண்டு கலகம் இல்லை
தியாகம் உண்டு தீமைகள் இல்லை
அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட்டோம்
சுதந்திரம் பெற்றோம்
இரத்தம் இன்றி கத்தி இன்றி தியாகத்தால்
விளைந்தது சுதந்திரம்
முன்னோர்களின் தவப்பயனால் இன்று முன்னின்று
பாரதத்தாயை வணங்குகிறோம்
ஜாலியன்வாலாபாக் படுகொலை உலகமே பயந்தது
உயிர்த்து எழுந்து உரிமையுடன் போராடினோம்
பாரதத்தின் சுதந்திரம் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்
இனி இந்தியாவில் எங்கெங்கும் இன்பமே
துன்பம் இல்லை வரலாற்று சாதனையாளர்களை
தெய்வமென வாங்குவோம்
தாயின் மணிக்கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்
தாய் நாடு நமது தாய்க்கு இணையானது
நாட்டுப்பற்று கொண்ட நாம் ஒன்றிணைவோம்
நம் நாட்டினை முன்னேற்றிடுவோம்
பெண்கள், குழந்தைகளை நாட்டுப்பற்றுடன் வளர்க்கட்டும்
நம் உயிர் நாட்டிற்கு உடல் நாட்டிற்கு சேவை செய்வதற்கு
இந்தியா எதிர்காலத்தில் வல்லரசாகும்
அடிமை இலா வாழ்வு
அன்பு பொங்கும் வாழ்வு
