
வாசலில் யாரோ நிற்பது போல் தோன்றவே, செல்லம்மா போய் பார்த்தாள் அடுத்த வீட்டு தங்கம். வெளியூருக்கு போனவள் நாலு வருடத்திற்கு பின்பு வந்திருக்கிறாள். “தங்கம் எப்ப வந்த? அடடா உனக்கு குழந்தை இருக்கா? மறுபடியும் வந்து விட்டாயா?”
“சிவகாசி போய் வேலை செய்தோம். ஆனால் இந்த ஊர் போல் இல்லை. பிள்ளைக்கு மூணு வயசாகும் வரை அங்கிருந்து விட்டு இப்போது தூத்துக்குடியை பார்க்க வந்து விட்டோம்”
” தாயா பிள்ளையா வாழ்ந்தோம்.திடுமென ஊரை விட்டு போயிட்டியே?எனக்கு கை உடைந்தது போல ஆயிற்று. நான் பேசினது எல்லாம் மறந்துடு. அடிக்கடி வா”
“சரி வரேன்” செல்லம்மா மகளின் சீமந்தத்திற்கு பலகாரம் செய்தது தங்கம் தான். ஆனால் வளையல் போட மட்டும் விடவில்லை. குழந்தை இல்லாதவ வளையல் போடக்கூடாது என அவள் முகத்துக்கு நேரே சொன்னதால் அழுது கொண்டே வீட்டுக்குச் சென்றவர்கள், சிவகாசி போய் வாட்ச்மேன் வேலை பார்த்தார் தங்கத்தின் கணவர். அப்போது ஒரு நாள் குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டதும் அதை எடுத்தார். நல்ல அழகான ஆண் குழந்தை. யாரோ வேண்டாம் என்று வீசி விட்டு சென்றது. அதை வீட்டுக்கு எடுத்து வந்து தன் குழந்தையாக வளர்த்தார்கள். அதற்கு நான்கு வயதாகும் வரை அங்கு இருந்து விட்டு இப்போது தூத்துக்குடி வந்து விட்டார்கள் குழந்தைக்கு தான் ஒரு அனாதை என்று தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.அன்று அவள் மனதை புண்படுத்திய செல்லம்மா “குழந்தை அச்சு அசலா ஒன்னே உரித்து வைத்திருக்கிறது” என்கிறாள். நரம்பில்லாத நாக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லும்.அடுத்தவர் மனதை புண்படுத்துவது சிலருக்கு பொழுதுபோக்கு.
