
ஆரம்பப் பள்ளியில்
பாடிய காலத்தில்
உற்சாகம் தெரிந்த
ஞாபகம்
உயர்நிலைப் பள்ளியில்
பாடிய காலத்தில்
காதல் தெரிந்த
ஞாபகம்
கல்லூரிப் பருவத்தில்
பாடிய காலத்தில்
கோபம் தெரிந்த
ஞாபகம்
வேலைப் பருவத்தில்
படித்த காலத்தில்
கடமை தெரிந்த
ஞாபகம்
ஓய்வுப் பருவத்தில்
படிக்கும் காலத்தில்
ஞானம் தெரியும்
நம்பிக்கை
முதுமைப் பருவத்தில்
படிக்கும் காலத்தில்
என்ன தெரியுமோ
யோசனை

படத்தில் பாரதி இருக்கிறார். (உங்கள்) பெயரில் பாரதி இருக்கிறார். கவிதை வரிகளில் மட்டும் அவரைக் காணோமே!
நன்றி ஐயா , உண்மை . பருவத்துக்குள் பாரதியை ஒளித்து வைத்து விட்டேன் .