உமா ஸ்வாமிநாதன்/வானம் தொட்ட விரல்

​அமாவாசை நள்ளிரவு. மயானத்தின் அமைதியை உலைக்களப் புகையும் சுடுகாட்டுச் சாம்பல் மணமும் சூழ்ந்திருந்தன.

​அங்கே அவன் நின்றிருந்தான். யாரிடமும் பேசமாட்டான். அவன் எதுவும் சாப்பிடுவது இல்லை.
உடலெங்கும் திருநீறு பூசிய அகோரி. அவனது வலது கை ஆள்காட்டி விரல் எப்போதுமே வானை நோக்கி நிமிர்ந்திருந்தது; தலை மட்டும் சற்று பக்கவாட்டில் சாய்ந்திருக்க, இன்னொரு கையில் சுருட்டு கொள்ளி கட்டை போல்,
அந்தப் பார்வை பார்ப்பவர் நெஞ்சை நடுங்கச் செய்தது. ஊர்மக்கள் அவனைப் பார்த்து அஞ்சி நடுங்கி ஓடினர்.

​அந்த ஊருக்குப் பெருநோய் வந்தபோது, வைத்தியர்கள் அனைவரும் கைவிட்டனர். மரணபயத்தில் அலறிய மக்கள், வேறு வழியின்றி அகோரியைத் தேடி ஓடிவந்தனர்.

​அவன் தன் சாய்ந்த தலையை நிமிர்த்தாமல், வானை சுட்டிக்காட்டிய விரலை அப்படியே அசைத்து, சுடுகாட்டுச் சாம்பலை அள்ளி நோயாளிகளின் மேல் தூவினான்.

“இறைவன் ஒருவனே மேல் இருக்கிறான், அஞ்சாதே” என்பதுபோல இருந்தது அவனது பாவனை.

ஆனால் என்ன அதிசயம்,
​அடுத்த சில நாட்களில் ஊரின் நோய் முற்றிலும் மறைந்தது.
அவன் காட்டிய பயங்கரமான தோற்றத்திற்குப் பின்னால் எல்லையற்ற கருணை ஒளிந்திருந்ததை மக்கள் உணர்ந்தனர். பயம் நீங்கி, அவனது பாதங்களில் விழுந்து வணங்கினர்.


பெங்களூரு
கதை 124 சொற்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன