கண்களிலே பனி அரும்பும்/தி சந்தானம்

நீ சொன்ன வரிகள் எல்லாம்
காற்றலையில்
கதிரொளியில் 
காக்கைச் சிறகதனிவ் 
நீரலையில்
நெடு வரையில்
மண்ணில்
மரப் பொந்தில் 
மாதர் தீங்குரலில்
கற்பனையில்
சொப்பனத்தில் 
காணும் பொருள் யாவும்
கலந்து நிறைந்திருக்கும்
கண்களிலே பனி அரும்பும்