சுஶ்ரீ/விபூதிப் பிள்ளையார்

எங்க வித்யா, மெடிகல் என்ட்ரன்சுக்கு நீட் பரிட்சை எழுதி இருக்கா.நன்னாதான் எழுதி இருக்கா,ஆனாலும் பயம் நல்ல ரேங்க் வந்தாதான் சயான் மெடிகல்ல இடம் கிடைக்கும்.மாதுங்கால இருக்கற எங்க ஃபிளாட்டுக்கு பக்கத்துல.

வித்யாவோட சீனியர் ஸ்வேதா , ‘விபூதி பிள்ளையாரை’ வேண்டிக்கோ நிச்சயம் ராங்க் வரும்னு.அதுல இருந்து நச்சரிக்கறா விபூதி பிள்ளையாரை பாக்கணும்னு.

எனக்கு அந்த பிள்ளையார்,மதுரை மீனாட்சி கோவில்ல இருக்கார்னு கண்டு பிடிக்கவே 3 நாள் ஆச்சு.ரிசல்ட் வரதுக்குள்ளே போகணும்னு புறப்பட்டு மதுரை வந்தாச்சு.அடேயப்பாடி கோபுரத்தைப் பாத்து அசந்து போனோம்.வித்யா
பறக்கறா,”அப்பா 10 மணி ரிசல்ட்,அதுக்குள்ளே விபூதிப் பிள்ளையார்.”

கிழக்கு கோபுரம் வழியே உள்ளே நுழைஞ்சா ஒரு பெரிய பொற்றாமரைனு தெப்பக்குளம் கோவிலுக்குள்ளேயே.அங்கே இருந்தே வரிசை அம்மனை பாக்க,பணம் கொடுத்தா அரைமணி நேரத்துல பக்கத்துல இருந்து தரிசனம்னு ஏஜன்ட்கள்.

விபூதிப் பிள்ளையார் எங்கேனு கேட்டேன்.ஏற இறங்க பாத்துட்டு ,இது என்னனு கையையை காட்டினான்.ஒரு பிள்ளையார் பாவமா விபூதியில் குளித்த மாதிரி சிறுசா ஒரு மூலைல. வித்யா விபூதியை எடுத்துப் பூசிண்டு 10 நிமிஷம் தியானம் பண்ணினா.

பையன் மும்பைல இருந்து ஃபோன் பண்ணினான்,அக்காவுக்கு ரேங்க் 32 எந்த காலேஜ் வேணா கிடைக்கும்னு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன