தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/முதல் சொத்துச் சண்டை

மூத்தவனுக்கும் இளையவனுக்கும் தொடர் வாக்குவாதம். நஞ்சை மூத்தவனுக்குப் போனதில் இளையவனுக்கு வருத்தம். நேராக தெரு முனையில் ‘தேமே’ன்னு வீற்றிருக்கும் பிள்ளையாரிடம் சரணடைந்தான். அவரோ சிரித்தார். அப்போது அங்கு வந்த ஊர்த் தலைவர் இளையவனைப் பார்த்து ” தம்பி, உலகத்தில முதல் சொத்துச் சண்டையே நம்ம பிள்ளையாரும் முருகனும் மாங்கனிக்காகப் போட்டதுதான். அவரால இதைத் தீர்க்க முடியாது. உங்கப்பா சாகுறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி எங்கிட்டே சொன்னாரு நஞ்சை மூத்தவனுக்கு. இளையவனுக்கு இதுவரை விளைவிக்காத கன்னி நிலம். அவன் அதுல எதைப் போட்டாலும் தங்கமா விளையும். புஞ்சை நிலத்துல மண் சத்து எல்லாம் செத்துப் போச்சு. உற்பத்தித் திறன் குறைஞ்சுகிட்டே வருது. இளையவன் சின்ன வயசுக்காரன். கஷ்டப்பட்டு உழைச்சு கன்னி நிலத்தைப் பொன் வெளையும் பூமியாக ஆக்கலாம் என சொல்லியிருக்காரு. பேசாம உழவு வேலையை ஆரம்பி. உங்களுக்குள்ளே சண்டையே இனி வரக்கூடாது.”

இளையவனுக்குத் தந்தை மனசு புரிஞ்சுது. ஊர்த் தலைவரைக் கும்பிட்டான். அப்படியே பிள்ளையாரைப் பார்த்து ‘ நீதானே ஆரம்பிச்சே” என முறைத்துக் கொண்டு நின்றான். சில நொடிகள் கழித்து பிள்ளையார் சிலை அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது போலத் தோன்றியது.

(117 வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன