ருக்மணி வெங்கட்ராமன்/வரவேற்போம் பிள்ளையாரை!

“அம்மா.!” அழைத்தான் ராமு.

“என்னடா.! கண்ணா?”

” நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியாம். அதனால் லீவ்.”

“ஆமாண்டா. வேலை செய்யற வீட்டில் அந்த அம்மா சொன்னாங்க. நாளைக்கு சீக்கிரம் வரச் சொல்லி இருக்காங்க.”

“நம்ம வீட்டிலேயும் பிள்ளையாரை வச்சு கும்பிட லாமா?”

“பிள்ளையார், பூ, பழம் வாங்க காசு வேணும். நாம கோயிலில் போய் சாமி கும்பிட்டு வரலாம்.”

கடைத் தெருவிற்கு வந்தவன் பிள்ளையார் செஞ்சு விற்பவர்களைப் பார்த்தான்.
“அண்ணே.! உங்களுக்கு உதவி செய்யவா?”

“நான் காசு எதுவும் தர மாட்டேன். சோறு வாங்கித் தர்றேன்.”

அச்சில் மண் அடைத்து பிள்ளையார் செய்வதைக் கற்றுக் கொண்டான். வியாபாரம் நன்றாக நடந்தது.

வீட்டிற்கு கிளம்பினான்.‌
“சாப்பிட்டு விட்டு போகலாம்.”

” வேண்டாம். எனக்கு பச்சை மண் கொடுங்க போதும்.”
அவர் மண்ணை ஒரு பையில் போட்டுத் தந்தார். கூடவே கொஞ்சம் பணமும் தந்தார்.

வீட்டிற்கு வந்தவன் அச்சு இல்லாமலேயே அழகான பிள்ளையார் செய்தான். பூ , பழங்கள் வாங்கி வந்தான்.
வீடு திரும்பிய அம்மாவிற்கு மகிழ்ச்சி.

அருகில் உள்ள சிறுவர்களையும் அழைத்து பிள்ளையார் பூஜை செய்தான்.
அம்மா பாயசம் செய்து தந்தார்..
பள்ளியில் சொல்லிக் கொடுத்த ‘பாலும் தெளிதேனும்’ பாடலை அனைவரும் பாடினர்.

மனதார வேண்டினால் பிள்ளையார் வழிகாட்டுவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன