பத்மா ராகவன்/கண்ணீரைத் துடைத்தான் கணேசன்

அமெரிக்கா வாழ் ரம்யா, உடன் அழைத்துச்சென்றால் அவமானம் நிச்சயம் என்று, ஆட்டிசம் மகனை எங்குமே கூட்டிச் செல்ல மாட்டாள்.

விநாயக சதுர்த்தி சமயம், குழந்தைகளுக்கு அவரவர் கையாலேயே விநாயகர் சிலை செய்யக் கற்றுத்தரும் வீணா, ரம்யாவின் மகன் கணேசனை இம்முறை அழைத்துவரவைத்து விட்டாள்.

ஆயிரம் முறை அந்த விநாயகரையே வேண்டிக்கொண்டு, பயந்தபடியே கணேசனுடன் வந்தவள், அவன் மிக மிக ஸ்வாரஸ்யமாக, வேற எந்த நினைவும் இல்லாதவனாகி, வீணா சொல்லிக் கொடுப்பதை உன்னிப்பாகக் கவனித்து, களிமண்ணைப் பிசைந்து, உருவகப்படுத்தி, தும்பிக்கை முதலான அவயவங்கள் சரியானபடி அமைத்து, எல்லாருக்கும் முன்னதாக, அழகான விநாயகர் சிலையை உருவாக்கியதும், அப்படியே நெகிழ்ந்து விட்டாள்.

அவன் வயதொத்த மற்ற புத்திசாலிக் குழந்தைகள் செய்த சிலைக்கின்னும், இது மிகவும் பர்ஃபெக்ட்டாக இருப்பதாக வீணா சொல்லச் சொல்ல, அவள் கண்கள் நீரைப் பெருக்குகின்றன. மகன் கணேசன் அவள் கண்ணீரைத் துடைக்கிறான்.

“அவனுக்கு டால் மேக்கிங் நல்லா வரும்போல. அவனை அதில் எங்கேஜ் பண்ணு” ரம்யாவை அணைத்த வீணா ஆறுதலளித்தாள்.

இப்போ சண்டித்தனம் ஏதும் செய்யாமல் ஆர்வமாக பொம்மைதயாரிக்கும் வகுப்புக்குப் போறான் கணேசன்.

அனைத்துக்கும் காரணம் கண்ணீரைத் துடைத்த அந்த “கணேசனின்” அருளன்றோ.

124 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன