
ஆற்றங்கரை பிள்ளையார் முன்..
“கஜானனம் பூத கணாதி சேவிதம்..”
தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்ட பரத் தலையில் மழைச்சாரல்.
திடுக்கென்று எழுந்தவன் எதிரில் செம்பில் தண்ணீருடன் நின்றிருந்தாள் வித்யா.
“என்ன வித்யா நீ? நம்ம ஊர் ஆத்தங்கரை பிள்ளையார் கனவுல வந்தார். விபூதி வாங்கறதுக்குள்ள நீ எழுப்பி விட்டுட்டே” என்றவன் சட்டென்று யோசனையில் ஆழ்ந்தான்.
“என்ன பரத் யோசனை”
“இல்ல.. பிள்ளையார் நெத்தியில விபூதி பூசி வட்டமா சந்தனம் குங்குமம் வைக்கறதுதானே வழக்கம். ஆனா இன்னிக்கு குங்குமம் கரைஞ்சு வழிஞ்ச மாதிரி.. வித்தியாசமா இருந்தது.
இந்த மாதிரி யார் நெத்தியிலயோ பாத்திருக்கேன். ம்.. ம். ஆங்..! அப்பா இறந்தப்ப ஒரு வயசான பாட்டி இப்படித்தான் நெத்தியிருந்து குங்குமம் வழிய, முக்காடு போட்டுகிட்டு ஓரமா நின்னு அழுதுட்டு இருந்தாங்க. நம்ம சொந்தக்காரங்களான்னு கேக்கணும்னு நினைச்சு வேலை மும்முரத்தில் மறந்துட்டேன். இன்னைக்கு அதை ஞாபகப்படுத்தற மாதிரி வந்த கனவுல பிள்ளையார் என்ன சொல்ல நினைச்சிருப்பாரு..!”.
கனவு தொடர்ந்திருந்தால்..!
“அந்த வயசான பாட்டிதான் உங்கப்பாவைப் பெத்தவங்க. அவங்க மனநிலை சரியில்லாததால உன்னோட தாத்தா, குழந்தையையும் பிடுங்கிட்டு அவங்களை காப்பகத்துக்கு அனுப்பிட்டாருனு பிள்ளையார் சொல்லியிருப்பார்.”
127 வார்த்தைகள்
