
” என்னாச்சுங்க, அப்போதில் இருந்து நம் வீட்டு வாசல் பிள்ளையாரையே வைச்ச கண்டெடுக்காமல் பார்க்கறீங்க” என்று கேட்டாள் சிவகாமி தன் கணவன் சங்கரனிடம்.
” உனக்கு நினைவிருக்கா? அம்மா எப்போதும் சொல்வாங்க, விநாயகர் தான் இருப்பதிலேயே எளிமையான கடவுள். மஞ்சளில் பிடித்து வைத்து வணங்கினாலும் அருள் தருவார். வெறும் எருக்கம்பூவிலும், அறுகம்புல்லிலும் மகிழ்ந்து வரமருள்வார். அரசமரத்தடியில் அமர்ந்து இருந்தாலும் அவரின் அருள் குறையாது. அதனால் சங்கரா, எப்பவும் நீ நம் வாசல் பிள்ளையாரை வணங்கி அவரிடம் சொல்லி விட்டு வெளியே கிளம்பு. நீ போகும் காரியம் நிச்சயம் ஜெயமாகும் என்று.”
“ஆமாங்க, அவங்க என் கணேசா, என் கணேசா என்று அவரைக் கூப்பிட்டபடி தான் கடைசியாக உயிரையும் விட்டாங்க. அதுக்கென்ன இப்போ? “
“நேற்று நான் ஆபீஸ் வேலை விஷயமா காரில் என் மேனேஜருடன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டி இருந்தது. நான் நம் கணேசனைக் கும்பிட்டுக் கிளம்பி பைக்கை எடுத்தா அது ஸ்டார்ட் ஆகாமல் படுத்த , அவர் கோபித்து கொண்டு என்னை விட்டுக் கிளம்பி பெரிய விபத்தில் சிக்கி இப்போ உயிர் பிழைப்பாரான்னு தெரியாமல் இருக்கார் ” .
“பைக் மெக்கானிக்கோ ஒண்ணும் பிரச்சினை இல்லை என்கிறார். அது தான் நம் கணேசன் என்னைக் காப்பாற்றிய லீலையை எண்ணி அவனைப் பார்க்கிறேன் “
142
