ஷைலஜா /விடாது நெருப்பு

டில்லி அருகே அது ஒரு சின்ன ஊர். ஆனால் அந்த ஊர் கோயிலின் பிள்ளையார் மிக சக்தி வாய்ந்தவர். அதுமட்டுமா?

“. டேய். கதிரேசா.இது அபூர்வ உலோகத்தில் ஆன பிள்ளையார் .6 கோடிக்கு விலை பேசியாச்சி ..இப்ப ராத்திரி11மணி.விடியறதுக்குள்ள ஆஸ்திரேலியாக்குநாம அனுப்பியாகணும் திட்டம் போட்டபடி. எல்லாம் தயாரா இருக்குதுல்ல?”

“ஆங்.. டெல்லி முழுக்க பன்றி காய்ச்சல் பரவுதுன்னு அந்த கோவிலுக்குள் யாராவது அந்த காய்ச்சலோடு போய் இருப்பாங்களோன்னு.சானிடைஸர்கூட ஞாபகமா எடுத்துக்கிட்டேன் மாணிக்கம்”

“சரி. நான் அரை கிலோ மீட்டர் தொலைவில் காரை நிறுத்திடறேன்.நீ பிள்ளையாரைப்பெயர்த்து எடுத்ததும் போன் செய்திடு. கார் எடுத்துட்டுகோயில்பின் வாசலுக்கு வந்துடறேன்…அப்படியே பங்கஜ்சேட்இடம்போயி பிள்ளையார் கொடுத்து பணம்6 கோடி வாங்கிட்டு தலை மறைவாயிடலாம்:”

கதிரேசன் கோவிலில் நுழையும்போதே இரு கைகளிலும்சானிடைஸர் அதிகமாகவேஅடித்துக் கொண்டான்.பூட்டைஉடைத்து இருட்டில் பிள்ளையாரைத் துழாவினான். தெளிவாகப் பார்க்க பையில் இருந்த செல்போனை எடுக்க அது அவசரத்தில்கீழே எங்கோ விழுந்தது . சட்டென சிகரெட் பற்ற வைக்க கையோடு கொண்டு வந்திருந்த தீப்பெட்டியைதிறந்து குச்சியைஎடுத்து  சர்ரக் எனதேய்க்க  அக்னிக் குஞ்சு முதலில் தயங்கி பிறகு வேகமாக கதிரேசனின் முழுக்கை  சட்டையை முத்தமிட்டது.  சானிடைஸரில் இருந்த ஆல்கஹால் அதை ஒளிபரப்பு செய்தது.

நெருப்புஉடலை எரிக்கவும் பெரிதாக கதறியபடி கீழே விழுந்தான்கதிரேசன் .

கண் எதிரே வெளிச்சத்தில் வெற்றி திலகம் இட்டுக் கொண்டிருந்த  பிள்ளையார் இவனை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

146 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன