வனஜா முத்துக்கிருஷ்ணன் /பசி தீர்த்த விநாயகர்

“ஏம்பா.. விநாயகா!திடீரென ஒரு நாளு என் கனவுல வந்தே.”

 “செல்லம்மா..நீ பாதி நாளு பசியோட இருக்கே! அப்படின்னு சொன்னே.”

“நம்ம உடம்புல உசுரு இருக்கற வரை உழைச்சு தான் சாப்பிடனும்னு இருக்கேன்னு சொன்னேன்.”

“அப்போ என் கோவிலுக்கு தினமும் வந்து தண்ணீர் தெளித்து கோலம் போடறயா?ன்னு கேட்டுச்சு. அதுல இருந்து இங்க வந்து அலம்பி, கோலம் போட்டு விநாயகருக்கு குங்குமம் விபூதி இட்டு அலங்காரம் பண்ணுவேன்.”

“என்னம்மா பாக்கறே? எதுக்கு நீ தினமும் செருப்பு போடாம ஓடி வந்தே?பாரு…காலில எத்தனை கொப்பளம்?இந்தாம்மா..தண்ணீ குடிச்சுட்டு இந்த பிரசாதம் சாப்பிடும்மா.”

“களைப்பா இருக்கயே”?என்றார் அங்கு வந்த ஒரு பெரியவர்.

“என்னங்க..?உங்க பிரசாதத்தை எனக்கு தந்துட்டீங்க?  எனக்கு பட்டினி கிடந்து பழக்கப்பட்ட உடம்புதான் இது. நீங்க சாப்பிடுங்க. என் கனவுல வந்த ஐயன் எனக்கு மறுபிறவி இல்லாமல் என்னை அழைச்சிக்கணும்.”

மறுநாள் காலை

பிள்ளையாரைச் சுற்றிலும் குங்குமம்  இறைந்திருக்க செல்லம்மாள்  பிள்ளையாரை அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

105

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன