
மீனாட்சி அம்மன் கோயில் மேல கோபுர வாசல் தாண்டியதும், ஆடி வீதியில், மதில் ஓரத்தில் அருள் புரிபவர்தான் பரீட்சை பிள்ளையார். இவர் தான் ஏழை மாணவர்களுக்குக் கண்கண்ட தெய்வம். பரீட்சை நேரத்தில் இவர் சந்தி முதல் அந்தி வரை வாய் மூடா விரதம் தான். மீதி நாட்களில் முப்போதும் பட்டினி தான். அவரும் தன் அன்னை மீனாட்சியிடம் வேண்டித்தான் இருந்தார்.
அன்று சோமு தனது மனப்பாட பகுதியான விநாயகர் அகவலை அவர் முன் உட்கார்ந்து மனனம் செய்ய முற்பட, சிறிதாகக் கூட்டம் கூடியது. ஒரு முதியவர், ” அப்பனே! அருமையாகச் சொல்கிறாய்! கருத்துரையும் சொல்! கேட்போம்! என்றதும்” சோமுவும் தனக்குத் தெரிந்த அளவில் விநாயகர் அகவல் பற்றி விரிவுரை ஆற்ற, கேட்டவர்கள், கைதட்டிப் பாராட்டினார்கள். “தம்பி நன்றாகச் சொல்கிறாய்! . தினமும் ஏதேனும் சொற்பொழிவு செய். உனக்கு அது நல்ல பலன் தரும் என்று சொல்ல; சோமு தினமும் ஏதேனும் ஒரு பொருள் பற்றி அங்குச் சொற்பொழிவு செய்யத் துவங்க. தினமும் சிறு பூஜையுடன் “சொல்லின் செல்வன் ‘ திருவாளர் சோமநாதன் அவர்களின் சொற் பொழிவை இன்பமுடன் செவிகொள்கிறார்; பரீட்சை பிள்ளையார்.
125
