வே. கல்யாண்குமார்/காணவில்லை

வீதியோரத்திலே மரத்தில்
தொங்கிய சிவப்பு பெட்டி
எங்கே காணவில்லே..
சைக்கிளில் வந்த தபாலுக்காரர்
எங்கே போனாரோ தெரியவிலலை.!
ஆசையில் எழுதிய அஞ்சல் கார்டுகள்
அருகிப் போச்சுதே காணவில்லை..!
அய்யாக் கடையியிலே வாங்கிய பேனாவை
திறந்து எழுதவும் நேரமில்லை.!

உள்நாட்டுக் கடிதம் உறையினில் இட்டு
ஒட்டி அனுப்பினோம் ஒரு காலத்திலே..
பணவிடை செய்தோம்..
பாதையில் அதைப்பெற
காத்து இருந்ததை மறக்கவில்லை.!
வெய்யிலில்..மழையினில்..
கடிதத்தைச் சுமந்து வந்தவர்
எங்கே காணவில்லை.!
கைப்பேசி வந்த காரணத்தாலே
கையெழுத்துப் போடவும் தெரியவில்லை.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன