
உன்னை நினைத்து விட்டால்.. செல்லம்மா.!
இல்லறத் தோட்டத்திலே.. செல்லம்மா..
என்கரம் பிடித்து வந்தாய்..!
நல்லறம் நடத்த வந்தாய் செல்லம்மா..
என் கவிதையுடன் கலந்தாய்.!
ஏழ்மையை தாங்கிக் கொண்டே செல்லம்மா..
எழுதென்று சொல்ல வந்தாய்..
ஈருடல் ஓருயிராய்
வாழ்வில் ஏற்றம் தரப் பிறந்தாய் செல்லம்மா!
என் துணையாக நீயும் வந்தாய்!
காற்று வெளியிடையே
நான் கவிதைகள் புனைகயிலே..
கவி ஊற்றின் வடிவினிலே..
செல்லம்மா என்னை ஆற்றுப்படுத்த வந்தாய்.!
செல்லம்மா.. என் ஆவி கலந்து வந்தாய்.!
காக்கைக் குருவிகளுக்கு நான் அரிசியை இரைக்கயிலே..
பசியைத் தாங்கிக் கொண்டு செல்லம்மா..
என் பக்கம் நின்று இரசித்தாய்..
ஆக்கமாய் அன்புருவாய் செல்லம்மா.!
ஆருயிராக வந்தாய்.!
{பாரதியார் தன் மனைவி செல்லம்மாவுக்கு பாடியது.!}
~
