அதிரன்/தூறல்

அந்தி கருக்கல்
போல்
இருளுகிறது
நண்பகல்

பூவாளி நீர்போல்
மெல்லத் தூவுகிறது
வானம்

நாசியெங்கும்
மண் வாசம்

வருடி வருடி
தீ மூட்டுகிறது
ஊதைக் காற்று

தன்னைத்தான்
தழுவிக்கொள்கிற
உயிர் ஒன்றை

ஜன்னல் வழி
எட்டிப் பார்க்கிறது
தூவானம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன