விஜயலக்ஷ்மி கண்ணன்/வண்ண வண்ண பொம்மை!

“பொம்மை வாங்கலையா அம்மா,பொம்மை!”
குரல் கேட்டு சட் என எழுந்து முன் கதவைத் திறந்து பார்த்தாள்.
சின்ன வயது பெண் தலையில் மூங்கில் பின்னிய கூடை நிறைய வண்ண வண்ண பொம்மைகளோடு இடுப்பில் நாலு அல்லது ஐந்து வயதுக்குள் இருக்கும் ஒரு பெண் குழந்தை சகிதம் வியாபாரம் செய்யத் தெருவுக்குள் வந்தவளைப் பார்த்து வைதேகிக்குச் சந்தோஷம்.
“வாமமா இங்கே. கூடை இறக்கி வை.”பெண் லட்சணமாக இருந்தாள்.
“உன் பெயர் என்னம்மா?”
“என் பெயர் கனகா அம்மா.”
அம்மா எனக்கு தண்ணி வேணும் என்று குழந்தை தாயிடம் கேட்க, வைதேகி உள்ளே போய் சொம்பு நிறைய மோர் கொண்டு வந்து கிடைத்தவுடன் சிறுமி கீதா கையில் வைத்து இருந்த சூலத்தைக் கீழே வைத்து ஆசையாக மோர் குடித்து தனது தாயிடம் டம்ளரை நீட்டினாள்.
வேகாத வெயில் பாவம் குழந்தையோடு தலைப் பாரமும் சேர்ந்து வியாபாரத்தில் இறங்கிய கனகாவை நினைத்து வருந்தினாள்.
விலை கேட்டு ,வீணாகப் பேரம் பேசாமல் கணிசமாகப் பணம் கொடுத்து எல்லா பொம்மைகளையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.
“அம்மா நீ புண்ணியவதி தாயே! என் கணவர் தான் இந்த பொம்மை எல்லாம் செய்து தருபவர். அவரால் நடக்க முடியாது அம்மா,அதனால் தான் நான் வெளிய விற்க கிளம்பிடறேன்.”
“நல்லா இரு.
இன்னும் வேறு பொம்மைகள் புதிதாக இருந்தால் அடுத்த வாரம் எடுத்து வா.நான் வாங்கிக்கிறேன். “என்று சொல்லி மேலும் ஒரு நூறு ரூபாய்த் தாளை அவள் கையில்.திணித்தாள் வைதேகி.

157

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன