கரந்தை  இந்து /காஞ்சனாவின்  கனவு

  அருகில் படுத்திருந்த  காஞ்சனா  எழுந்து  அமர்ந்திருப்பதைத்  தூக்கத்தில்  புரளும்போது  பார்த்த   கணவர் சதாசிவம்,   

“என்னாச்சும்மா, தூக்கம் வரலையா? மறுபடியும் அதே கனவா? என்று ஆதரவாகக் கேட்டார்.
அழுதிருந்த கண்களைத் துடைத்தபடி, “ஏங்க நாளைக்கு நாம் கோயிலுக்குப் போகலாமா? யாரோ ஒரு புது சாமியார் வந்திருக்கிறாராம்.
இந்த பொம்மைகள் விற்கும் பெண் கையில் சூலம் ஏந்திய குழந்தையோடு தினம் ஏன் கனவில் வந்து தொந்தரவு பண்றான்னு அவரிடம் கேட்கப் போறேன். “
மறுநாள் கோயிலில் அந்த சாமியார்:
“நீங்க உங்க ஏழு வயது அறியாப் பெண்ணைப் பாலியல் தொல்லையால் பறி கொடுத்த போது எந்த சாமியும் என் பெண்ணைக் காப்பாதலையே. அப்போ இவை வெறும் பொம்மைகள் தான் . அவள் கையில் மட்டும் ஒரு ஆயுதம் இருந்தால் அவள் தப்பிச்சு இருப்பாளே என்று கோபப் பட்டீங்க . எப்பவும் அதையே நினைச்சு வருத்தப்பட்டுப் புலம்பி மனநிலை பாதிச்சு இருக்கு. அந்த ஆழ்மன வெளிப்பாடு தான் கனவா வருது. இந்தக் கனவு வராமல் இருக்க உங்க மனசை வேறு ஏதாவது விஷயத்தில் ஈடுபடுத்தி மாத்துங்க . சரியாகி விடும்,” என்றார் .

123

      

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன