எம் ஷங்கர்/பொம்மலாட்டம்

“அழகா சாவி போட்டு வீட்டைத் திறந்து நகையெல்லாத்தையும் திருடிட்டு போய்ட்டான்” சீதாப்பாட்டி இன்ஸ்பெக்டரிடம் புலம்பிக் கொண்டிருந்த போது அப்புசாமி அவசரமாக பால்கனிக்குப் போனார். “பொம்மக்காரி வந்துட்டாளாக்கும் ஜொள்ளுவிட்டுட்டு பார்க்கப் போயிட்டாரு” சீதாப்பாட்டி கடுகடுத்தாள். இன்ஸ்பெக்டரும் எட்டிப் பார்த்தார் கூடையில் பொம்மைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் குழந்தையுடன் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தாள். மறுநாள் அவர்களை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு அழைத்தார். “திருட்டுப் போன சாமான் கிடைச்சிருச்சு. திருடன அங்க பாருங்க.” இன்ஸ்பெக்டர் காட்டிய மூலையில் பொம்மக்காரி உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றி பொம்மைகள் சிதறிக் கிடந்தன அருகே அந்த குழந்தை..அட அதுவும் பொம்மைதானா!” அவள பார்த்தா பொம்மைக்காரி மாதிரி இல்ல பொம்மைகள் எல்லாமே வித்தியாசமா இருந்ததுன்னு டவுட் வந்து அவளைப் பாலோ பண்ணி செக் பண்ணும்போது பொம்மைகள் எல்லாம் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கேமரா. தெருவ சுத்தி வந்து வீடுகள ஸ்கேன் பண்ணி பீரோ சாவி வீட்டுக்கதவு சாவி எல்லாத்துக்கும் நகலும் எடுக்கும்படியான அட்வானஸ்டு மெஷின் பொம்மைகளுக்குள்ள இருக்கு.”
“ஓ தட் மச அட்வான்ஸ்டு மெஷின்ஸ்,” என்று சீதாப்பாட்டி கன்னத்தில் கைவைத்திருந்தபோது, “நீ ஏண்டீம்மா இந்த மாதிரி காரியங்கள பண்ற?” என்று அப்புசாமி பொம்மக்காரி கன்னத்தைத் தொட்டு கேட்டுக்கொண்டுருந்தார்.

124

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன