
எனக்குக் கிருஷ்ணரை எப்போதும் பிடிக்கும்
உலகமே ஒரு விளையாட்டு என்பார்
எல்லோருக்கும் என்றும் தோழராய் இருப்பார்
கிருஷ்ணரே தவழ்ந்து
வாருங்கள்
கிருஷ்ணருக்குப் பெண்கள் சவகாசம் அதிகம்
அவரைச் சுற்றிலும்
கோபியர்கள் கோபியர்கள்
அத்தனைப் பெண்கள் சுற்றினாலும்
ஒன்றுமில்லை.
கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள்
ஓஷோ எழுதிய
கிருஷ்ணா புத்தகம்
வாங்கியிருக்கிறேன்
இன்னும் நான் படிக்கவில்லை
இப்போது கண்ணில்
படவில்லை புத்தகம்
கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள்
யார் மாதிரி
கிருஷ்ணர் இருப்பார்
என்னை மாதிரி
உங்களை மாதிரியா
எப்படி இருப்பார்
எப்படி இருப்பார்
கிருஷ்ணரே தவழ்ந்து
வாருங்கள்
எப்போதும் இறைவனைத் துதிப்போம் நாம்
நம்முடன் நெருங்கிப்
பழகுபவர் கிருஷ்ணர்
அவரை அழைப்போம்
அவரை அழைப்போம்
கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள்!
