
இது நடுத்தர வயதைத் தாண்டிய தம்பதியர் பற்றிய கதை . மனைவியை இழந்த பின்னர், வயதான காலத்தில் அவரைக் கவனித்துக் கொள்ள ஒருத்தி வேண்டும் என்று சொந்தக்காரர்கள் வற்புறுத்தியதின் பேரில் இரண்டாம் மணம் செய்து கொள்கிறார் கதையின் நாயகர். வருபவளும் கணவனை இழந்தவள். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தவள். நாயகனின் வளமான வாழ்க்கையின் மேல் ஆசைப்பட்டு வாழ வந்தவள். அவரின் பெண்களுக்கும் அவளின் பையனுக்கும் இதில் விருப்பம் இல்லாவிட்டாலும் திருமணம் நடக்கிறது .
படுக்கையில் நெருங்கும் கணவனிடம், அவன் சொத்துக்களைக் கேட்டு தொந்தரவு செய்து சிறிது நகைகள் பெற்றும், தன் மகனுக்கு திருமணம் செய்தும் சாதித்துக் கொண்டவள் தொடர்ந்து சொத்தில் பங்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்த அவள் மேல் வெறுப்புக் கொண்டு அவ்வப்போது அவளை அவள் மகன் வீட்டில் விட்டு வருவதும் பின்பு கூட்டி வருவதுமாக அவர் வாழ்க்கை தொடர்கிறது.

It is not complete ji . Please post full review