ருக்மணி வெங்கட்ராமன் /ஓவியம் சொல்லும் கதை

வகுப்பறையில் ஒரு ஓவியம் மாட்டப் பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்ததும் ஓவியக் கல்லூரி மாணவி காவ்யாவின் மனதில் ஏதோ வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.
பல வண்ணங்களில் அந்த ஓவியம் வரையப் பட்டிருந்தது. அந்தப் படத்தில், ஒரு ஆணின் முகமும், அருகில் ஒரு பெண்ணின் முகமும் தெரிந்தன. அந்த ஆடவன் கண்களில் சோகம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது.
“இந்த ஓவியம் என்ன சொல்கிறது?”என்று மாணவர்களை ஆசிரியர் கேட்டார்.
காவ்யா மெதுவாக எழுந்தாள். “இவர்கள் கணவன் மனைவி. வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு துயரம் அவர்களின் மனதை ஆக்கிரமித்துள்ளது. ஆனாலும் பெண்ணின் கண்களில் நம்பிக்கை துளிர் விடுகிறது. துன்பங்கள் வந்தாலும், ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த ஓவியம் சொல்கிறது” என்றாள்.
ஆசிரியர் புன்னகைத்தார்.
“வண்ணங்கள் வேறுபட்டாலும், அவை ஒன்றாகச் சேர்ந்தால் தான் அழகான ஓவியம் உருவாகிறது. அதுபோல மனிதர்களும் அன்புடன் இணைந்தால் இல்வாழ்க்கை அழகாகும்.”
காவ்யா அந்த ஓவியத்தை மீண்டும் பார்த்தாள். இப்போது அதில் சோகம் தெரியவில்லை; நம்பிக்கை தெரிந்தது.

113

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன