சுஜாதா கிருஷ்ணமூர்த்தி /சிதறிய வண்ணங்கள்

அந்த ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்த உடனே இந்த ஓவியத்தைப் பார்த்த எல்லோருக்கும் மிகப் புதுமையாகப்பட்டது. கூட்டம் முழுவதும் அந்த ஓவியத்துக்கு முன்புதான் நின்று கொண்டிருந்தது.
அயல் நாட்டவர் கூட்டம் முழுவதும் அந்தப் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருந்தது.
“இது பிரபல ஓவியர் ராஜன் வரைந்த ஓவியம்.
“என்ன விலை?”
“80 ஆயிரம் “
“என்னது இவ்வளவு விலையா!”
“உத்துப் பாருங்களேன் ஓவியத்தோடு கண்களும் கைகளும் ஏதோ ஸ்பெஷலா சொல்ல வருது. புதுமையா மல்டி கலர்ஸ் வைத்து வரைந்து இருக்கார்.
10 15 பேர் இந்த ஓவியம் வேணும்னு கேட்டுட்டு போயிருக்காங்க.
நாளைக்கு இந்த ஏலம் போட போறோம். ஆரம்பமே ஒரு லட்சம் தான்.”
ஓவியர் ராஜன் வீட்டில் மனைவியிடம்
” நேற்று வரைந்த ஒரு அழகான ஓவியம் உன் பையன் விளையாடும் போது தட்டி விட்டு கலர் எல்லாம் படத்துல சிதறி போச்சு சொன்னேன்ல,
அது ஒரு லட்சத்துக்கு நாளைக்கு ஏலத்துக்கு போக போகுது “

110 வார்த்தைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன