வனஜா முத்துக்கிருஷ்ணன்/பார்வதி நீ எங்கே?

ஓவியக் கண்காட்சியில் ஒவ்வொரு ஓவியமாகத் தன் இடுங்கிய கண்களால் முகத்தைச் சுருக்கிப் பார்த்துத் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த சங்கரனின் கால்கள் ஒரு ஓவியத்தின் முன் நின்றது.
‘அலங்கோலமான சிதைந்து போன முகம்…சிவந்த கண்கள்..நசுங்கிய மூக்கு,,’ இதை வரைந்தது ஒரு பெண்ணாகத்தான் இருக்கும். சங்கரனும் ஓவியர் ஆயிற்றே!
அந்த ஓவியத்திற்குப் பின்னால் சோகமான பெண் இருக்கிறாள்’ என்று நினைத்ததும் சட்டென்று அவர் மனதில் தன் மகள் பார்வதியின் முகம் தோன்றியது.
உடைந்த குரலில் உடல் நடுங்க,
“இது.. இது என் மகள் பார்வதி வரைந்த ஓவியம். அவள் ஓவியத்தில்தான் உயிர் இருக்கும். அவள் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள்தான் ஓவிய வடிவில் வந்து இருக்கிறது.”என்று
அந்த ஓவியத்தின் முன் மண்டியிட்டு, “பார்வதி நீ எங்கே?” என்று குலுங்கி அழ ஆரம்பித்தார் வயதான சங்கரன். அவருக்கு அந்த ஓவியத்திற்குள் இருந்த பார்வதியின் வேதனை கலந்த முகம் தான் தெரிந்தது.
திரையின் ஓரத்தைப் பிடித்து மறைந்திருந்த இருந்த பார்வதியின் கண்களில் நீர். அப்பா… என்று கதறினாள் பார்வதி.
எத்தனையோ வருடங்கள் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த பார்வதிக்கும் சங்கரனுக்கும் இடையே இருந்தது மெல்லிய திரை மட்டுமா?

123

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன