
அந்த இடிந்து போன ஓட்டு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்த சீதாவின் காலடியில் பப்பு என்ற பூனை படுத்துக் கொண்டு இருந்தது.
“என்னடா பப்பு. நம்ம ரெண்டு பேருக்கும் பசிக்குது. யாராவது சாப்பாடு கொண்டு வந்து தரக்கூடாதா?
எப்பவும் உனக்கு நானும் எனக்கு நீயும் துணை. எனக்கு ஒரு உதவி செய்யறயா?”
பப்பு மியாவ் என்று கத்தியது.
தெருவில் “இடியாப்பம் இடியாப்பம்” என்ற குரல் கேட்டு ஓடிய பப்பு இடியாப்பம் விற்கும் வேலனின் வேட்டியைப் பிடித்து சீதாவின் இடத்திற்கு இழுத்து வந்தது.
பசியுடன் சோர்வாக அமர்ந்திருந்த சீதாவைப் பார்த்ததும் வேலனின் மனம் கனத்தது.
“என்னடா பூனைக்குட்டி. இவங்கதான் உன்னை வளர்த்தவங்களா? பாவம். இந்தம்மா பசியோட இருக்கறதைப் பார்த்துட்டு பேசாம போனா நம்ம மனசு மன்னிக்குமா? காசு இன்னைக்கு வரும். நாளைக்குப் போகும். ஆனா மனுஷங்க உசிரு?” என்று சீதா, பூனை இருவருக்கும் இடியாப்பம் தேங்காய்ப் பால் தந்தான் அந்த மனதில் ஈரமுள்ள மனிதன் வேலன்.
பல நாட்களுக்குப் பின் இருவர் முகங்களிலும் புன்னகை மலர்ந்தது.
115
