மீனாட்சி சுந்தரமூர்த்தி/இருப்பது ஒரே வாழ்க்கை

அழகிய சிங்கர் அவர்களின் ‘என்பா’. விற்கு,

காட்டில் மேட்டில் அலைந்தால் என்ன?
வீட்டில் விருந்து படைத்தால் என்ன?
ஓட்டில் இரந்து உண்டால் என்ன?
இருப்பது ஒரே வாழ்க்கை.

எனக்கே எனக்கென வைத்து வாழலாம்.
எனக்கும் உனக்கும் எனவும் வாழலாம்
ஊருக்கும்,உறவுக்கும் எனவும் வாழலாம்
இருப்பது ஒரே வாழ்க்கை.

போதும் போதும் என்றாலும் போற்றுவார்
போதும் போதும் என்றாலும் தூற்றுவார்
போற்றுவதும் ,தூற்றுவதும் ஏதும் தராது
இருப்பது ஒரே் வாழ்க்கை.

                 

One Comment on “மீனாட்சி சுந்தரமூர்த்தி/இருப்பது ஒரே வாழ்க்கை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன