செல்லம் சேகர் /ஆன்மீக அர்த்தங்கள் 7

சுக்லாம் பரதரத்தில் ஒரு அழகிய ஆன்மீக அறிவியல்

பிள்ளையார் கோவில் போனாலோ அல்லது ஏதேனும் பூஜை ஆரம்பித்தாலோ , விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லு போதும் நாம் முதலில் சொல்வது , ஆரம்பமே நமது நெற்றி (தலையில்) பொட்டின் இரு பக்கங்களிலும் குட்டி கொள்வதுண்டு ….

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே”

பின்னரே நாம் எந்த பூஜைக்கும் சங்கல்பம் செய்து கொள்வது வழக்கம்
காரணம் தெரியுமா ?
என்றும் எந்த தடங்கல் இருந்தாலும் , அதை நீக்குபவர் விநாயகரே …இது நாம் அனைவரும் அறிந்ததே .
முழுமுதற் கடவுளின் மாமன் விஷ்ணு .
வெள்ளை நிற உடையோடு கூடிய மஹாவிஷ்ணு எங்கும் நிறைந்தவர் …யானை நிறத்தவரும் , நான்கு கரங்களுடன் பிரகாசமான முகத்துடன் இருக்கும். விநாயகரை இந்த சுலோகம் கூறி த்யானிப்பதன் மூலம் மாமனையும் , மருமகனையும் ஒரு சேர வணங்கி தடங்கல் இல்லா வெற்றியை பெற முடியும் .
“தடை நீக்கும் காரிய சித்தி ஸ்லோகமே சுக்லாம் பரதரம் விஷ்ணும் “
உலகமாகவே இருக்கும் விஷ்ணுக்கும் …முழுமுதற் கடவுளான வினை நீக்குபவரான விநாயகருக்கும் ஒருங்கே சொல்லும் ஸ்லோகமே.
பொதுவாக அறிவியல் சார்ந்த ஆன்மிகம் இருக்கும்போது அது குழந்தைகளிடம் எடுத்து செல்ல எளிதாகிறது .
பூமி என்கிற இந்த பிரபஞ்சத்தின் துவக்கத்தின் போது எங்கும் ஒளியும் ப்ரகாசமுமான தூய்மையான எனர்ஜியே இருந்தது . அறிவியலின்படி எல்லா வண்ணங்களும் இணையும் போது தூய்மையான வெள்ளை நிறம் கிடைக்கும் …அதுவே ஆக்கத்தின் மூல பொருள் .
இந்த துவக்கத்தோடு “சுக்லாம் பரதரம் ” என்ற வெண்ணிற ஆடை அணிந்த கடவுளரை ஒத்திட முடிகிறது .
விஷ்ணும் என்ற வார்த்தை இறைவன் எங்கும் நிறைந்து இருப்பதை குறிக்கிறது . இதுவும் எனர்ஜியை குறிக்கும் …அதாவது பூமியின் 95 % இருண்ட பகுதியை அதாவது குவாண்டம் field என்பது பூமியின் வேற்று இடங்கள் உள்பட அணுவின் துகள்களுக்கு இடையிலும் எங்கும் நிறைந்து உள்ளது .இந்த பூமியின் இந்த டார்க் எனர்ஜி உள்ளவையே விஷ்ணும் என்று குறிக்கிறது . பூமியின் மூல புள்ளியான தூய்மையான எனர்ஜியும் இருண்ட எனர்ஜியும் கடவுளர்களோடு தொடர்புடையவை .
சசி வர்ணம் என்கிறபோது தூரத்தில் இருந்து நாம் விண்ணை பார்க்கும்போது சந்திரனை போல் ஒளிரும் சாம்பல் நிறமும் காஸ்மிக் அண்ட் கேலக்ஸிஸ் உடன் தொடர்புடையவை ..பூமியின் இருளும் ஒளியும் கலந்து கருமையும் வெண்மையும் உள்ள பூமியின் அசல் நிறத்தை குறிக்கிறது .
சதுர்புஜம் என்றாகிய சொல் நான்கு கைகளை உடையதாய் ஆன்மீக ரீதியில் குறித்தாலும் அறிவியல் ரீதியாக நான்கு அடிப்படை பலன்களை குறிக்கும் …அதாவது புவி ஈர்ப்பு … மின்காந்தம் , உறுதியான நியூக்ளியர் என்கிற அணுக்கரு விசை மற்றும் உறுதியற்ற நியூக்ளியர் என இவை நான்குமே பூமியை தாங்கி காக்கிறது .
இப்படிப்பட்ட அமைதியான ஒரு முகத்தை குறித்து நாம் தியானிக்கும் போது நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நம் காரியங்கள்யாவும் தங்கு தடையின்றி நடைபெறும் .
உடல் மெய் இரண்டையும் ஒருங்கிணைத்து சுக்லாம் பரதரம் சுலோகம் சொல்லி நாம் எந்த ஒரு காரியத்தையும் துவங்குகிறோம் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன