
கண்ணகி குப்பத்தை பெரும் செல்வந்தர் ஒருவர் விலைக்கு வாங்கியிருந்தார். அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டுவதாக ஏற்பாடு. குப்பத்தில் உள்ளவர்கள் தலா ஒரு வீட்டிற்குக் கணிசமான தொகை வழங்கினார். ஆனால் பாக்கியம் மட்டும் வாங்கவில்லை. பரம்பரை பரம்பரையாக மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற மனசில்லை. பக்கத்து வீட்டுக்காரி முனியம்மா எவ்வளவோ சொல்லியும் பாக்கியம் செவி சாய்க்கவில்லை.
அப்படி குப்பத்தை விட்டு ஒரேயடியாகப் போவதாக இருந்தால் தன் உயிரற்ற உடல் தான் போகும் எனக் கூறியிருந்தாள்.
ஆம் ,நினைத்ததைச் சாதித்துவிட்டாள் பாக்கியம். அன்று வாசல் திண்ணையில் சாய்ந் திருந்தபடி உயிரை விட்டிருந்தாள். கூடவே அவள் ஆசையோடு வளர்த்த கரும்பூனையும் அவள் காலடியில் உயிரை விட்டிருந்தது.
76
