
11-9-26 இன்றைய விருட்சம் இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் கவிதை
————-
அறுந்த செருப்பு
காதைக் குடைந்துவிட்டுத்
தூக்கிப்போடும்
குச்சியாய் என்னை வீசி எறியாதே
சுளையை உரித்துத் தின்றபின்
எறிந்துவிடுகின்ற தோலென்றே
என்னை நினைக்காதே
மை தீர்ந்தபின்
இனி எழுதவே
முடியாதென நினைத்து எறிகின்ற
பேனாவன்று நான்
கைப்பிடி அறுந்த பையை மீண்டும்
தைத்துக் கொள்ளலாம் கண்ணே।
அறுந்துபோன செருப்பு கூட
தைத்து வைத்துக் கொண்டால்
தக்க காலத்தில்
கைகொடுக்கும் அன்றோ?
தைக்க ஊசி நூலை விட
முதலில் மனம்தான் தேவை
