தி.வள்ளி/பிச்சி

பார்க்க வாட்டசாட்டமாக இருப்பாள். திண்ணையின் ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள். எந்த சலனமும் இருக்காது. யாரிடமும் பேசவும் மாட்டாள். அவள் சாப்பிடுகிறாளா என்பது கூட யாருக்கும் தெரியாது. இரக்கப்பட்டு சிலர் ஏதாவது உணவுப் பொருளைப் பக்கத்தில் வைப்பார்கள். ஊரில் அவளை “பிச்சி” என்றழைத்தார்கள்.
தெரு பிள்ளைகள் சில நேரம் சின்ன கல்லை விட்டெறிந்து விட்டு ஓடியே போவார்கள். அவள் காலடியில் கிடக்கும் கருப்பு பூனை மட்டும் அவர்களைப் பார்த்து ஒருவித சத்தம் கொடுக்கும். அவர்களுக்கும் அதைக் கண்டால் தான் பயம்.
ஊருக்கு வந்த முனிவர் அவளை இனம் கண்டு கொண்டார்.
“மக்களே ஒரு காலத்தில் இந்த இடம் ஒரு வனமாக இருந்தது. ஒரு கொடூரன் அட்டூழியம் செய்து கொண்டிருந்தான் அவனை அடக்க வந்த காவல் தெய்வம். அப்படியே இந்த பிச்சியின் ரூபத்தில் இங்கே தங்கி விட்டாள். இந்த பூனை அவள் பூர்வ ஜென்மத்தின் தொடர்பு. அவள் இந்த இடத்தை விட்டகன்றால் இந்த ஊருக்குக் கெடுதல்கள் நடக்கும்” என்றார்.
மக்களுக்கும் புரிந்தது.. நோய்த்தொற்று உலகை ஆட்டுவித்த போது அவர்கள் கிராமத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை.
அதிலிருந்து மக்கள் பிச்சியைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினார்.

122

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன