
எங்கோ பிறந்தவராம்..எங்கோ வளர்ந்தவராம்..எப்படியோ
என்னுடன் இணைந்தவராம்..என்று பழைய திரைப்படப் பாடல் உண்டு.
ஆனால் …குறுந்தொகையில் வரும் கீழே சொல்லியுள்ள பாடல் நாம் எல்லாம் அறிந்ததே!
பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயல்நீரார்
குறிஞ்சித்திணைப் பாடல்
‘‘யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே’’
என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும்
எம்முறையில் உறவானவர்கள்?
எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்?
செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து
பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ
அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன.
(அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது.
மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
-

உண்மை தான்.மறுக்க முடியாத ஒன்று.