தீக்குள் விரலை வைத்தால்/மதுவந்தி


விரல் நுனியின் நுனி தொட்டு
நாவின் நுனியில் ஒத்தியெடுத்தால்
தித்திப்பாய் ஊறும் தேன்.
கரை புரண்டோடும் நதியில்
மார்கழிக் காலையொன்றில்
கால் கட்டைவிரல் நீட்டி
நொடியில் தொட்டெடுக்க
சிலீரென புரியும் குளிர்.
வண்ணம் மிளிரப் பூத்து
வாவென அழைக்கும்
மலரைக் கொய்ய நீட்டிய
கைகளில் சுருக்கென
சிவப்பாய் உணர்த்தும் முள்.
முத்தெனச் சுடரும்
விளக்கின் ஜோதி
செம்பழமாய் ஈர்க்கும்.
குழந்தமை மாறா மனசு
தொடச் சொல்ல,
கண்ணிமைக்கும்
கணப் பொழுதில்
தீக்குள் விரலை வைத்தால்……

3 Comments on “தீக்குள் விரலை வைத்தால்/மதுவந்தி”

Comments are closed.