இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் மகாகவி பாரதியாரின் இல்லத்தில் “வானவில் பண்பாட்டு மையம்” ஏற்பாடு செய்திருந்த கவிப் பொழிவு நிகழ்ச்சியில் கொண்டு வாசித்த, பரிசு பெற்ற கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

பாரத பூமி பண்புளோர் காக்கும்
நேரிய செய்கையால் நிமிர்த்தே நிற்பதை
உலகம் வணங்கி உளமாரப் போற்றுது!
கலகம், வன்முறை, களவுகள், புரிவோர்
கைகளால் தேசம் கசங்கிடா வண்ணம்
மெய்யுடன் காப்போர் மேன்மையைப் வணங்குது!
களைப்பிலா உழைப்பால் கடமையைச் செய்ய
இளைஞர் கூட்டத்து இதயத்தில் தூய்மையை
அன்பால் விதைப்பதை அகிலமே மெச்சுது!
வன்மம் இலாத மக்களைப் பெற்ற
மகத்தான மண்ணென வாயாரப் பாடுது!
இகத்தில் இதுபோல் இனிஒரு நாட்டினை
எனக்குக் காட்டென எல்லோரும் சொல்வது
உனக்குக் கேட்காமல் போனது வெட்கமே !
கோவிலை இடிப்பதைக் கொள்கையாய்க் கொள்வதும்
நாவிலே பொய்வைத்து ஞானமொழி சொல்வதும்
போரிலே எதிரியைப் புறம்தள்ளும் வீரரை
ஊரிலே கேலியாய்க் கூறித் திரிவதும்
பதவிக் காகவே பகல்வேடம் கொள்வதும்
நிதமும் நீசெயும் வேலையாய்ப் போனதால்
போலி உன்முகத் தோலை உரித்திட
ஆலிலைக் கண்ணன் அவசியம் வருவான்!
தீக்குள் விரலை வைத்தால்
தீக்கிரை என்பது தெய்வத் தீர்ப்பே.
(27.11.2021 23.44 pm)

பாரதி தீக்குள் விரல் தொட்டு ணர்ந்த கண்ணன் போலி முகத்தோலை உரித்திட வருவான் எனச் சொன்ன கவி வரிகள் அபாரம் .
கலியுகம் முடித்து வரும் பிரள யத்தில் வரும் ஆலிழைக் கண்ணன் அவசியம் வருவான் எனச் சொல்கிற வரிகளும் அருமை.
Very niy
Very Nice
Very Nice