ஒப்பனை முகங்கள்…!/ ஆர்க்கே…!


தோளில் தலையில் விளையாடும்
குழந்தையாய் அறிமுகமாகி

சிறுமியாய் அவனிடமே
குட்டு வாங்கிப்
பாடம் படிக்கும் தங்கையாகி

அங்க வெளிப்பாட்டழகியாய்
அயல்தேசத் தெருவில் நாயகியாய்
அவனுடன் ஆடிக் களித்து

அக்காவாய் அண்ணியாய்
சில காலம் அம்மாவாயென
அவதாரமெடுத்து நாயகனைத்
திருத்திச் சீராக்கி
தீயதற்குச் சீறவைத்து

காலச் சுழற்சியில்
அவள் மட்டும் அப்பத்தாக் கிழவியாகி
இப்போது பைக்கில்
காலேஜ் போகும் அதே ஹீரோவிடம்
“வெள்ளென வந்திரு என் ராசா” என

தன் காவிப்பல் தெரியச்சிரித்து
டாட்டா காட்டி மகிழ்கிறாள்–
தமிழ் சினிமா நாயகி..!

One Comment on “ஒப்பனை முகங்கள்…!/ ஆர்க்கே…!”

Comments are closed.