
கோவை எழிலன்
நம் பக்தி இலக்கியங்கள் வெறும் இறைவனைப் புகழும் புறத்திணைப் பாடல்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. இறைவனின் மேல் காதல் கொண்ட அகத்திணைப் பாடல்களையும் கொண்டவை.
இங்கே கண்ணன் மேல் காதல் கொண்ட தன் மகளின் நிலையை அவள் தாய் கூறுகிறாள். “என் மகள் கண்ணன் மேல் காதல் கொண்ட நாள் முதலாய் பித்து பிடித்தவள் போல் நடந்து கொள்கிறாள். திடீரென மாட்டைக் கட்டிக் கொண்டு இதையன்றோ கண்ணன் மேய்த்தான் என்கிறாள். அதுவாவது பரவாயில்லை, நாகத்தைக் கண்டு இதுவல்லவோ பரந்தாமனின் இருக்கை என்று கொஞ்சுகிறாள். இவள் பித்துக்கு அளவில்லாமல் போகிறதே” என வருந்துகிறாள்.
நம்மாழ்வாரின் பிரபந்தப் பாசுரம் இது
“கோமள வான்கன்றைப் புல்கிக்
கோவிந்தன் மேய்த்தன என்னும்;
போம்இள நாகத்தின் பின்போய்,
அவன்கிடக் கைஈது என்னும்;
ஆம்அளவு ஒன்றும் அறியேன்;
அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே”.
