ருக்மணி வெங்கட்ராமன் / சஞ்சலம்

கல்யாணி அமைதியாக அழக் கூட முடியாமல் துவண்டு போய் இருந்தாள். அசைவற்று அமர்ந்து இருந்தாள்.
அவள் மனம் இயங்கியது. திருமணம் ஆகி பத்து வருடங்களாகக் குழந்தைப் பேறு இல்லை. இருவரும் போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை.
ஒரு கோவிலில் உட்கார்ந்து இருந்த பொழுது ஒரு பெண் “இந்த குழந்தையைப் பார்த்துக்கோ. வர்றேன்.”என்று கொடுத்து விட்டுச் சென்றாள்.
குழந்தை இருவரிடமும் ஒட்டிக் கொண்டது. நேரம் நகர்ந்தது. மதியம் ஒரு மணி. கோவில் பூட்டும் நேரம். அந்தப் பெண் வரவில்லை. பூசாரியிடம் தகவல் கூறி விட்டுக் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
மாலை வரை யாரும் குழந்தையைத் தேடி வரவில்லை. குழந்தையை வளர்ப்பதாக எழுதிக் கொடுத்து விட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில் கணவர் இறந்தார்.
எல்லோரும் “இந்தக் அதிர்ஷ்டம் கெட்ட குழந்தை, அவ புருஷனையே காவு வாங்கிடுச்சு. ” என்று கூறினர்.
” கொண்டு போய் அனாதை ஆசிரமத்தில் விடு.”
தவழ்ந்து வந்து குழந்தை அவள் காலடியில் அமைதியாகப் படுத்துக் கொண்டது. அருகில் கணவன் வளர்த்த பூனை.
அசைவற்று அமர்ந்திருந்த கல்யாணி ஆதரவாகக் குழந்தையையும் பூனையையும் தடவிக் கொடுத்தாள்.

மொத்த வார்த்தைகள் 125

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன