
ஆண்டிக்கு இந்தநாள் கொண்டாட்டம்.!
அரசமரத்தடியில் கோலாகலம்!
ஆடியுயும்.. பாடியும்.. ஊர்கோலம்
அருகம்புல்லாலே மணிமகுடம்.!
கொழுக்கட்டை நம்மையே அழைக்கும்..
குளத்தங்கரை பக்தி மணக்கும்.!
கலைக்கட்டும் திருவிழா நடக்கும்.!
கணபதியே என்று மனம் துதிக்கும்.!
சுண்டலின் வாசனை இழுக்கும்.!
சீர்காழியார் பாட்டு ஒலிக்கும்.!
கண்டதும் பிள்ளையார் வணக்கம்..
தோப்புக்கரணம் போட்டுத் துதிக்கும்.!
உயர்வுகள்.. தாழ்வுகள் இல்லை!
ஊருக்கெல்லாம் இவர் பிள்ளை!
செயலுக்கு முன் பணிந்து வெல்ல..
விநாயகர் மாந்தனின் பக்திக்கு எல்லை.!
