செல்லம் சேகர்/சாய்வு நாற்காலி

நல்லபடியாக மகள் காவ்யா திருமணம் முடித்து வீடு வந்தவுடன் ஸ்டோர் ரூமில் இருந்த சாய்வு நாற்காலியில் கைகளை மேலேற்றியபடி நிம்மதியாகச் சற்று நேரம் அமர்ந்தார் சபேசன் .
மனைவி ராஜி திருமண மண்டபத்தில் இருந்து கொண்டு சாமான்களை வந்த பலகாரங்கள் மங்கலப்பொருட்களின் பெட்டிகளைப் பிரித்து வைக்கும் வேலையில் அமர்ந்தாள் .
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் பெண்ணிற்குத் திருமண வரங்களைத் தேடித் தேடி நிறைய வரன்களைக் காரணமே புரியாமல் மகள் காவ்யா நிராகரித்து ஒருவழியாக மாப்பிள்ளை ராகவனைப் பிடித்துப் போயிற்று .
பணத்திற்கு பஞ்சமில்லா விட்டாலும் பெண்ணை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைப்பது பெரும்பாடாயிற்று பெற்றோருக்கு .
பெண்கள் படித்து கையில் நாலு காசு இருக்கும் தைரியம் திருமணத்தை ஒரு சுதந்திர கேடாகப் பார்க்கும் காலமாக உள்ளது இன்றைய நிலைமை
சபேசனின் பணி ஓய்விற்குப் பின் தனது அப்பா பயன்படுத்திய இந்தச்சாய்வு நாற்காலியில் கவலையின்றி இன்றுதான் நாம் உட்கார முடிந்தது என்று எண்ணுகையில் மனைவி வந்தாள் “காவ்யா மாப்பிள்ளையுடன் தனிக்குடித்தனம் தான் செய்வாளாம் . உடனே நீங்கள் அவளுக்கு ஏற்றார் போல் ஒரு வீடு பாருங்கள் . ஒரு வாரத்தில் வீடு வேண்டுமாம் “
மீண்டும் அலைச்சலா என்றபடி சாய்வு நாற்காலியை ஏக்கமாகப் பார்த்தார் சபேசன்

133

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன