
மனைவி காலையிலேயே வீட்டு வேலைகளை முடித்து.. மழைக்கு முன்.. பணிக்குக் கிளம்பிவிட்டாள்.
மகனும் மழையில் நனைந்து கொண்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.
மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது.
அதைவிட முக்கியமாக.. அலைபேசியின் கடைசி மூச்சு வரை உருட்டப்பட்டு.. அதுவும் இப்போது உயிரற்று ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டது.
வேலையில்லாத கண்ணனுக்கு மட்டும்..
வெளியிலும் செல்ல முடியவில்லை. வீட்டிலும் தங்க முடியவில்லை. யாரையும் வீட்டிற்கும் அழைக்க முடியவில்லை.
என்ன செய்வது என்று தெரியாமல்.. அமைந்திருந்த அந்த இருக்கையில்.. கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டு.. கையை தலைக்கு மேல் அண்டக்கொடுத்து.. யோசிக்கத் துவங்கினான்.. ‘பெய்வது அடை மழையா.. பேய் மழையா..?’ என்று.
71
