கே.சரண்யா/அப்பாவின் நாற்காலி

“அப்பாடா இன்னிலேர்ந்து சாவகாசமாக பேப்பர் படிக்கலாம். காலங்கார்த்தால எழுந்து அவசரமாக ஹெட்லைன்ஸை படிச்சுட்டு கமலா குடுக்கிற காபியை ஒரு கையில் உறிஞ்சுண்டு டபரா டம்ப்ளரை டொக்கென வைத்துவிட்டு பேக்கை மாட்டிட்டு ஷூவை ஒரு தட்டு தட்டிவிட்டு ஓடியாச்சு ரிட்டையர்மெண்ட் ஆயிடுத்து.என்று மனதுக்குள் ஒரு சந்தோஷத்தோடு வாசல் திண்ணையில் ஓரமாகச் சாய்த்து வைத்திருந்த அந்த மடக்கு நாற்காலியை எடுத்துத் துடைத்து வைத்தார் சுந்தரம். அப்பா போனபிறகு இன்னிக்கு தான் அதற்கு வாழ்வு. அடுப்பில் வெந்து சம்பாதிச்சு இரண்டு அக்கா ஒரு தங்கைக்குக் கல்யாணம் பண்ணி வச்சார். பாவம் அப்பா, வேலை இல்லாத நாட்கள் இந்த சேரில் தான் வாசம் ஒய்யாரமாய் உட்கார்ந்து இருப்பார் என்று தன் மனதுடன்‌ பேசிய சுதந்திரத்திற்கு ஏனோ தன்னை அறியாமல் கண்கள் கசிந்தன. தூசி தட்டி விட்டு அதில் உட்கார்ந்து தலை மேல் இரு கையும் உயர்த்தி மடக்கினான்.கால்களையும் தூக்கி வைத்தான். “அப்பா” வாய் முணுமுணுத்தது.. மனசும் லேசானது“இன்று முதல் ஹேப்பி” என விசில் அடித்தார்.

,”என்னங்க இந்த மாசம்‌ ரேஷன்ல சாமான் வாங்கல. இந்தாங்க கார்டும் பையும்,வர்ற வழியில் மளிகை சாமானும் என லிஸ்டை திணித்தாள் கமலா.

வார்த்தைகள் 124

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன