
கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொள்வது ராமசாமியின் வழக்கம்.
தேசிய வங்கியில் 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கலாமென்று நினைத்தவனுக்கு சோதனைமேல் சோதனை.
அவனுக்கு முட்டிவலி.
மனைவி இருதய நோயாளி.
இரண்டு பெண்கள். யாரும் சென்னையில் இல்லை.
எதற்கும் கவலைப்படாத ராமசாமி கப்பலே கவிழ்ந்தாற்போல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
அதனால்தான் கழுத்துக்குப் பின்னால் கையைக் கட்டிக்கொணடு மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறான் நாற்காலியில்.
50 words
