பாலசாண்டில்யன்/எஞ்சிய நிஜம்

தொழிலதிபர் ராமசாமியின் பிரம்மாண்ட சுழல் நாற்காலியைச் சுற்றி எப்போதும் முகஸ்துதி பேசும் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. “சார் சொன்னா சரியாத்தான் இருக்கும்!” என்ற போலிப் பாராட்டு மழையில் அவரது அகந்தை வானைத் தொட்டது. நாற்காலி தந்த அதிகார மயக்கத்தில், தன்னைச் சுற்றிய மனிதர்களை விட அந்தப் பதவியையே அவர் அதிகம் நேசித்தார்.
காலச் சக்கரம் சுழன்றது. எதிர்பாராத தொழில் வீழ்ச்சியும் வயோதிகமும் வந்தபோது, அந்த ‘முதலாளி’ நாற்காலியோடு சேர்ந்து அவரைச் சூழ்ந்திருந்த முகங்களும் மாயமாய் மறைந்தன.
ஆரம்பத்தில் தனிமையும் அதிகார இழப்பும் அவரை வாட்டின. ஆனால், வீட்டின் எளிய நாற்காலியில் சாய்ந்து, கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்து வானத்தைப் பார்த்த ஒரு மாலைப் பொழுதில், அவருக்குள் புது வெளிச்சம் பிறந்தது. சல்யூட்டுகளும் ஆரவாரமும் இல்லாத அந்த வெறுமையில், புத்தக வாசிப்பும் எளிய மனிதர்களிடம் காட்டும் கனிவுமே உண்மையான நிம்மதியைத் தந்தன.
பதவி தந்த முகமூடி கழன்றபின்தான், ஒரு முழு மனிதனாக வாழ்வதன் அழகை ராமசாமி உணர்ந்தார். அதிகார நாற்காலிகள் அகலலாம்; ஆனால், மனிதனின் நற்பண்பும் உள்ளத்து அமைதியும் மட்டுமே காலத்தை வென்று எஞ்சியிருக்கும் என்றும் தான்

119

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன