அழகியசிங்கர்/பவித்திராவின் ஓவியங்கள்

பவித்திரா எப்படி யார் மூலம் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டாள் என்பது தெரியவில்லை.
அவளுக்கு ஆறு வயதுதான் ஆகிறது. இந்தச் சின்ன வயதிலேயே விதம்விதமாய் ஓவியங்கள் வரைகிறாள். முதலில் என்னிடம்தான் காட்டுவாள். பள்ளியில் நடக்கும் ஓவியப் போட்டிகளில் அவள்தான் முதல். ஓவியம் வரைந்த பிறகு அதை எப்படி வரைந்தாய் என்றால் சொல்ல வராது.
பரிசு பெற்ற இந்த ஓவியத்தில் கூட ஒரு சின்ன பெண் தலையில் ஒரு மரங்கொத்திப் பறவை. கையில் சின்னப்பெண் செடியைக் கையில் வைத்திருக்கிறாள். வினோதமான கற்பனை.
வழக்கம்போல் அவள் வரைந்த ஓவியத்தைப் பார்த்து, “யார் வரைந்தது என்று தெரிய வேண்டும். ஓவியத்தில் உன் இனிஷியலையும் எழுதி விடு,” என்றேன்.
ஏன்டா சொன்னோம் என்று ஆகிவிட்டது. அவள் ஓவியத்தையே மறைத்து விடுவதுபோல் அவள் இனிஷியல் இடம் பெற்று விட்டது.

87

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன