
ரொம்ப நேரம் வானத்திலேயே பறந்து கொண்டிருந்த அந்த மரங்கொத்திப் பறவை சானாவுக்கு அலுப்பாக இருந்தது.
சானாவுக்கு எப்போதுமே தன் அழகின் மீது ஒரு கர்வம் உண்டு இளம் பச்சை நிற இறக்கையுடன் தலையில் கிரீடம் வைத்தது போன்ற சிறகும், நீளமான மூக்கும், குட்டை கால்களுமாகத் தன்னை பறவைகளில் ஒரு ராணி போல எண்ணி கர்வம் கொண்டது.
மரங்கள் எத்தனை கெஞ்சினாலும் கேட்காமல் அவற்றைக் கொத்தி புண்ணாக்குவதே அதன் வேலை.
அன்று பறந்து நெடுந்தொலைவு வந்துவிட்டது. கண்ணு கெட்டிய தூரம் வரை மரங்களே இல்லை.
முதல்முறையாக தனக்கு அடைக்கலம் கொடுத்த எத்தனை மரங்களைத் தான் கொத்தி இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு மனதில் எழுந்தது.
சானாவுக்கு அலுப்பு வாட்டியது. எங்கேயாவது அமர வேண்டுமே. அமரக் கூட இடம் இல்லையே என்ற ஏக்கத்தில் சுற்றி முற்றிப் பார்த்தது.
அதோ பூச்செடிகளுக்கு நடுவே சோலை கொல்லை பொம்மை சிறுமி வடிவில் ஆடாமல் அசையாமல் நின்றது. அதன் மீது அமர்த்த மரங்கொத்திப் பறவை நிம்மதி பெருமூச்சு விட்டது. இனி எந்த மரத்தையும் கொத்துவதில்லை என்ற முடிவோடு.
114
